Building Unity and Dignity

“அறிவு, பண்பாடு மற்றும் அனைவரிடத்தும் மனிதநேயத்தை வளர்ப்பதற்காக எங்களுடன் இணையுங்கள்.”

Join us in nurturing knowledge, culture, and compassion for all. 

 
 

 

 

Vanangaaman Foundation truly uplifts our community with care and dedication.
John Doe

எங்களைப் பற்றி/About Us

தொலைநோக்குப் பார்வை.

“அறிவார்ந்த, ஆரோக்கியமான, பண்பாட்டுப் பெருமைமிக்க, சமூகப் பொறுப்புணர்வும் தன்னிறைவும் கொண்ட தலைமுறையை உருவாக்குவதன் மூலம், இளையோர் முதல் முதியோர் வரை அனைவரும் சமத்துவம், ஒற்றுமை, மனிதநேயம் மற்றும் பரஸ்பர மரியாதையுடன் வாழும் நிலையான, வளமான மற்றும் முன்னேற்றமிக்க சமூகத்தை உருவாக்குவதே எமது தொலைநோக்குப் பார்வையாகும்.”

Vision
“To build a sustainable, inclusive, and compassionate society where people of all ages—from youth to seniors—live with equality, unity, mutual respect, and human dignity by nurturing knowledgeable, healthy, culturally proud, socially responsible, and self-reliant generations.”

பணிக்கூற்று.

வணங்காமண் அறக்கட்டளை பின்வரும் நோக்கங்களை முன்னெடுத்து சமூக முன்னேற்றத்திற்காக அர்ப்பணிப்புடன் செயல்படும்:

  1. கல்வி, அறிவியல் மற்றும் திறன் மேம்பாட்டு வாய்ப்புகளைu ஊக்குவித்து, இளையோரின் அறிவு மற்றும் ஆளுமை வளர்ச்சிக்கு ஆதரவளித்தல்.
  2. சமூக நலன், நலவாழ்வு மற்றும் சமூக ஒற்றுமையை மேம்படுத்தும் சேவைகள் மற்றும் திட்டங்களை முன்னெடுத்துச் செயல்படுத்தல்.
  3. இளைய தலைமுறையினரை போதைப்பொருள், வன்முறை மற்றும் பிற சமூகச் சீர்கேடுகளிலிருந்து பாதுகாக்க விழிப்புணர்வு, வழிகாட்டல் மற்றும் நேர்மறைச் செயல்பாடுகளை முன்னெடுத்தல்.
  4. தமிழ் பாரம்பரியம், மொழி, கலை, பண்பாடு மற்றும் பாரம்பரிய விளையாட்டுகளைப் பாதுகாத்து, அவற்றை அடுத்த தலைமுறைக்கு எடுத்துச் செல்லும் நிகழ்ச்சிகள் மற்றும் பயிற்சிகளை ஊக்குவித்தல்.
  5. உடல்நலம், உடற்பயிற்சி, விளையாட்டு மற்றும் ஆரோக்கியமான வாழ்க்கை முறையை ஊக்குவிக்கும் திட்டங்களை நடைமுறைப்படுத்தல்.
  6. பொருளாதார மற்றும் சமூக ரீதியாக பின்தங்கியோர், முதியோர், மாற்றுத்திறனாளிகள் மற்றும் அவசர உதவி தேவைப்படுவோருக்கு மனிதநேய அடிப்படையில் உதவிகளை வழங்குதல்.
  7. தன்னார்வத் தொண்டு, தலைமைத்துவம், சமூகப் பொறுப்பு மற்றும் குடிமைப் பங்களிப்பை ஊக்குவித்து, அனைவரும் இணைந்து செயல்படும் வலுவான சமூகத்தை உருவாக்குதல்.


 Mission

The Vanangaaman Foundation is committed to advancing the well-being of individuals and communities through the following objectives:

  1. To promote education, lifelong learning, and skills development by providing opportunities that empower young people with knowledge, confidence, and leadership.
  2. To deliver community-based programs and services that enhance social welfare, inclusion, and the overall well-being of individuals and families.
  3. To protect and guide young people from substance abuse, violence, and other harmful influences through education, awareness, mentorship, and positive engagement.
  4. To preserve, promote, and celebrate Tamil language, culture, arts, heritage, and traditional sports while encouraging physical fitness, healthy lifestyles, and active participation in sports and recreational activities.
  5. To develop and implement programs that promote physical health, fitness, sports, and healthy lifestyles, encouraging individuals of all ages to lead active and healthy lives.
  6. To provide humanitarian assistance and compassionate support to individuals and families in need, regardless of their background or circumstances.
  7. To encourage volunteerism, civic responsibility, leadership, and community participation in building a stronger, more united, and resilient society.

இளைஞர்களுக்கு அதிகாரமளித்தல்/Empowering Youth

 இளைஞர்களுக்கு தன்னம்பிக்கை மற்றும் அறிவை வளர்க்கும் திறன் மற்றும் தலைமைத்துவ திட்டங்களை வழங்குதல்.

Providing skills and leadership programs that build confidence and knowledge for young people. 

கலாச்சார பெருமிதம்/Cultural Pride

கலைகள், மொழி மற்றும் பாரம்பரிய விளையாட்டுகள் மூலம் தமிழ் பாரம்பரியத்தை கொண்டாடுதல்.

Celebrating Tamil heritage through arts, language, and traditional sports. 

சமூகப் பாதுகாப்பு/Community Care

தனிநபர்கள் மற்றும் குடும்பங்களுக்கு மனிதநேயமான திட்டங்கள், உதவி முயற்சிகள் மற்றும் தன்னார்வலர்களால் முன்னெடுக்கப்படும் சேவைகள் மூலம் ஆதரவு வழங்கி, அவர்களின் கண்ணியம், நலவாழ்வு மற்றும் சமூக வலிமையை மேம்படுத்துதல்.  Supporting families with compassionate programs and volunteer-driven assistance. | மேம்படுத்துதல். 

Join Us

Subscribe to support a compassionate, inclusive society where everyone thrives together.